பெண்களையும் குறிவைக்கும் மாரடைப்பு… இந்த அறிகுறிகள் எல்லாம் ஆண்களுக்கு இருக்காதாம்…!!

June 17, 2022 at 3:06 pm
pc

மாரடைப்பு என்பது ஒரு பொதுவான இருதய நோய். இவ்வுலகில் பல மில்லியன் கணக்கான மக்கள் இந்த நோயால் மரணமடைகின்றனர். ஆண் பெண் என இருபாலரையும் விட்டு வைக்காத இந்த மாரடைப்பு நோய், உயிரியல் வேறுபாடுகளால் ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்களுக்கு இந்நோயின் பின்விளைவுகள் மிகவும் கடுமையானதாக இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

பொதுவாக, பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது, அதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் தெரியவதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் சின்ன சின்ன அறிகுறிகள் தெரியும்போது, தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டியது உங்களுடைய வாழ்நாளை அதிகரிக்கலாம். இப்போது பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முன்னரே ஏற்படும் அறிகுறிகள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

மாதவிடாய்:

ஈஸ்ட்ரோஜன் மாதவிடாய் நிற்கும் காலத்தில் பெண்கள் அதிகம் இருதய நோய்களால் பாதிக்கின்றனர். எனவே, அனைத்து பெண்களும் இருதய பிரச்சனைகளின் அறிகுறிகள், இருதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதவற்கான ஆபத்து காரணிகள் போன்றவற்றை தெரிந்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

இருதய கட்டமைப்பு:

ஒரு பெண்ணின் இதயம் பொதுவாக ஆணின் இதயத்தை விட சிறியதாக இருக்கும். இதனால், உள் அறைகள், இதயத்தின் சுவர்கள் போன்றவையும் கூட மெல்லியதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், இயற்கையாகவே பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தைவிட 10 சதவிகிதம் குறைவான இரத்தத்தையே வெளியேற்றுகிறது.

பெண்களுக்கு மாரடைப்பு அறிகுறிகள் என்னென்ன?

மாரைடைப்பின் மிகவும் பொதுவான அறிகுறி என்னவென்றால் ஆஞ்சினா, அதாவது இதயத்திற்கு இரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படும் ஒரு வகை மார்பு வலி. ஆனால், பெண்களுக்கு மாரடைப்பு வரும்போது இம்மாதிரியான மார்பில் வலி ஏற்படாது.

ஆனால், மற்ற அறிகுறிகள் இருக்கும். முதுகின் மேற்புறம் வலி, வாந்தி, சுவாசிப்பதில் அதிக சிரமம், அஜீரணம், மூக்கடைப்பு போன்றவை.

மார்பு வலியுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு கை, கழுத்து அல்லது தாடையில் வலி ஏற்படும்.

கடுமையான வயிற்று வலி ஏற்படும், சில சமயம் இது காய்ச்சல், நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் போன்றவற்றால் கவனிக்கப்படாமல் போகலாம்.

உங்களுக்கு தொடர்ந்து தூங்குவதில் பிரச்சனை இருந்தால், அதை உடனே நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொண்டு மருத்துவரை சந்திக்க வேண்டும். ஏனெனில், மாரடைப்பு பாதிக்கப்பட்ட பெண்களில் பாதிப்பேர் மாரடைப்புக்கு முன்னர் சில நாட்கள் தூக்கப்பிரச்சனையை அனுபவித்ததாக ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பின் மற்றொரு வழக்கமான அறிகுறி . அதிகப்படியான வியர்வை. குளிராக இருந்தாலும், வியர்த்து கொட்டும்.

அதிகப்படியான சோர்வு, உதாரணமாக எந்த வேலையும் செல்லாமல் இருந்தாலும்கூட மிகவும் சோர்வாக உணர்ந்தீர்கள் என்றால் இதுவும் மாரடைப்புக்கான அறிகுறி தான்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website