பெருமைப்படுகிறேன்.. தனுஷை புகழ்ந்து தள்ளிய அன்புமணி ராமதாஸ்!!ஏன் தெரியுமா ?

August 24, 2022 at 1:24 pm
pc

கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் சமீபத்தில் இயக்கி வெளியான படம் தி கிரேமேன். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் ஹாலிவுட் நடிகர்களுடன் இணைந்து எவிக் சான் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

நெட்ஃபிளிக்ஸ்

கொடூர கொலையாளியாக தனுஷ் நடித்திருந்த இப்படம் கடந்த மாதம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் தனுஷை பாராட்டி வருகின்றனர். தி கிரேமேன் சீக்குவலிலும் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக ரூஸோ சகோதரர்கள் அறிவித்துள்ளனர்.

அன்புமணி பாராட்டு

இந்நிலையில் நடிகர் தனுஷை பாமக தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் The GrayMan திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தேன். ஹாலிவுட் படத்தில் நடித்த நடிகர் தனுஷைப் பற்றி பெருமைப்படுகிறேன். நடிகர் தனுஷின் அனைத்து எதிர்கால முயற்சிகளிலும் மேலும் பல விருதுகளை தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கு கொண்டு வர எனது வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

விருதுகள்

நடிகர் தனுஷ் இரண்டுமுறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை பெற்றுள்ளார். மேலும் ஏராளமான ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் குவித்துள்ளார். தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி இந்தி சினிமாவிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் நடிகர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website