பெரும் அதிர்ச்சி – புதிதாக பரவிவரும் தக்காளி காய்ச்சலில் இதுவரை 85 குழந்தைகள் பாதிப்பு.

May 9, 2022 at 6:46 am
pc

கேரளாவில் புதிதாக பரவிவரும் தக்காளி காய்ச்சலில் இதுவரை 85 குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்தமாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், கொரோனா வைரஸ் காய்ச்சல் என பல்வேறு தொற்றுகள் கேரள மாநிலத்தை அச்சுருத்துவது வழக்கம், அந்தவகையில் தற்போது கேரள மாநிலத்தில் மற்றோரு தொற்று நோயாக தக்காளி காய்ச்சலும் பரவ தொடங்கியுள்ளது.

இந்த தக்காளி காய்ச்சலானது ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகமாக தாக்குவதால், கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளின் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கேரள மாநிலத்தின் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திகுறிப்பில், கொல்லம் மாவட்டத்தில் இதுவரை 85 குழந்தைகள் பாதுக்கபட்டு இருப்பதாகவும், இந்த நோய் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் தக்காளி காய்ச்சலின் பரவலை தொடர்ந்து, ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் ஆகிய பகுதிகளில் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர், இந்த நோய் தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை ஆனால் கவனமுடன் இருப்பது அவசியம் எனக்கூறி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தக்காளி காய்ச்சல் அறிகுறிகள்

தோலில் ஏரிச்சலுடன் கூடிய தக்காளி பழ அளவிற்கான சிவப்பு திட்டிகள் தோன்றுவதுடன், நாக்கில் அதிக வறட்சி தன்மைக்கான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

எரிச்சலுடன் தோன்றும் சிவப்பு திட்டி குமிழ்களில் இருந்து புழுக்கள் வெளியேறுவதாகவும் சில நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.

இத்துடன், காய்ச்சல், உடல்வலி,மூட்டு வீக்கம், சோர்வு மற்றும் கைகள், முழங்கால்கள், பிட்டம் ஆகியவற்றின் நிறமாற்றம் போன்றவை.

தக்காளி காய்ச்சல் சிகிச்சை

இந்த நோய்கான அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகுவது.

அதிகப்படியான தண்ணீர் ஆகாரங்கள் உட்கொள்ளுதல்.

ஏரிச்சல் ஏற்படும் இடங்களை சொறியாமல் இருப்பது.

நோய் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பது.

நோயாளியைச் சுற்றியுள்ள இடங்களை சுத்தமாக வைத்து இருப்பது.

தக்காளி காய்ச்சல் பெயர் காரணம்

தோலில் ஏரிச்சலுடன் கூடிய தக்காளி பழ அளவிற்கான சிவப்பு திட்டிகள் தோன்றுவதால் இதற்கு தக்காளி காய்ச்சல் என அழைக்கின்றனர், மற்றப்படி தக்காளிக்கும் இந்த காய்ச்சலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website