பொங்கல் ரிலீசுக்கு மோதும் இரண்டு படங்கள்

September 30, 2023 at 4:08 pm
pc

இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் கார்த்தியின் ’ஜப்பான்’ மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ’ஜிகர்தண்டா 2’ உள்பட ஒரு சில படங்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய இருக்கும் இரண்டு படங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சுந்தர் சி நடிப்பில் மற்றும் இயக்கத்தில் உருவான ’அரண்மனை 4’ திரைப்படம் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சயின்டிபிக் கதை அம்சம் கொண்ட ’அயலான்’ மற்றும் திரில் கதையம்சம் கொண்ட ’அரண்மனை 4’ ஆகிய இரண்டு படங்கள் பொங்கல் ரிலீஸ் என உறுதி செய்யப்பட்டுள்ளன ’
மேலும் பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் ’வணங்கான்’ மற்றும் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ’தங்கலான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் ரிலீஸ் பட்டியலில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website