‘பொன்னியின் செல்வன்’ குறித்து தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா போட்ட டுவிட்.. பதில் கூறிய லைகா!

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நாளை பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி உலக சினிமா ரசிகர்களும் மிகப்பெரிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா,தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது சமூக கருத்துக்களை வெளியிட்டு வருவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சற்று முன் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ’பொன்னியின் செல்வன்’ குறித்து ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார்.
அந்த டுவீட்டில், ‘நான் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை பற்றி அதிக கல்வி பெற்ற தலைமுறையை சேர்ந்தவன். சோழ சாம்ராஜ்யம் குறித்து அறியாமலேயே இருந்ததற்கு வருந்துகிறேன். சோழ சாம்ராஜ்யம் குறித்து நம்பமுடியாத பல தகவல்கள் இந்த படத்தில் ஆதாரங்களுடன் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள லைகா நிறுவனம், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் உங்கள் நம்பிக்கையை நிச்சயம் நிறைவேற்றும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த படம் உலகம் முழுவதும் நாளை வெளியாக உள்ளது என்று தெரிவித்து இந்த படத்தின் டிரைலர் வீடியோவின் லிங்க்கை அவருக்கு அனுப்பி உள்ளது.
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் இந்த டுவிட்டும், அதற்கு பதிலளித்த லைகாவின் டுவிட்டும் வைரலாகி வருகிறது.