‘பொன்னியின் செல்வன்’ படத்தை நிராகரித்த அமலாபால்!

September 12, 2022 at 7:24 pm
pc

பொன்னியின் செல்வன்’ படத்தை தான்ன் நிராகரித்ததாக நடிகை அமலாபால் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “சில வருடங்களுக்கு முன் ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்காக மணிரத்னம் என்னை அழைத்தார். நான் அவர் ரசிகை என்பதால் உற்சாகமாக ஆடிஷனில் கலந்துகொண்டேன். ஆனால், அப்போது அந்தப் படம் தொடங்கப்படவில்லை. இதனால் வருத்தமும், கவலையும் அடைந்தேன். பின்னர் 2021-ம் ஆண்டு அதே படத்துக்காக அவர் என்னை அழைத்தபோது எனக்கு நடிக்கும் மனநிலை இல்லை. அதனால் மறுக்க வேண்டியதாகிவிட்டது. இதற்காக வருந்துகிறேனா? என்றால் இல்லை. ஏனென்றால் சில விஷயங்கள் நியாயமானவை” என பேசியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website