ப்ரக்னன்சி டெஸ்ட் எடுப்பதற்கான நேரம் பற்றி எல்லா பெண்களும் தெரிந்து கொள்ளவேண்டியவை :.

June 2, 2022 at 7:58 am
pc

திருமணமான அனைத்து பெண்ணுகளுக்கும் தனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான தருணம் என்று சொன்னால், தாய்மை அடைவது தான். நாமும் கருவுற்று தாயாகப் போகிறோம் என்ற சந்தோசத்தை எந்த பெண் தான் விரும்பமாட்டாள். இதற்காக பல தாய்மார்கள் தவமாய் தவமிருக்கின்றனர். அதே நேரத்தில், ஒவ்வொரு பெண்களும் அந்த அற்புதமான தருணத்தை உறுதி செய்ய எப்போது பரிசோதனை செய்ய வேண்டும் என்பது பற்றியும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

திருமணமான ஒரு பெண் மாதவிடாய் தள்ளி போன உடன், தலைச்சுற்றல், மசக்கை வாந்தி, குமட்டல் உணர்வு வந்தவுடன் இந்த பரிசோதனை செய்யலாமா?, எத்தனை நாட்கள் கழித்து இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்?, எது சிறந்த நேரம்? என்பது பற்றி அனைத்து தகவல்களையும் விரிவாக இப்பதிவில் பார்க்கலாம்.

கர்ப்ப பரிசோதனை என்றால் என்ன?

கர்ப்ப பரிசோதனை என்பது சிறுநீரில் உள்ள ஹார்மோன் என்று அழைக்கப்படும் ஹீயூமன் சாரியோநிக் கோநாடாட்ரோபின் (ஹெச்சிஜி) அளவை கொண்டு அறியும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு கருவியாகும். கரு உருவானதும் அது தன்னை கர்ப்பப்பையில் பொதிந்து கொள்கிறது. கருவை சுற்றி உள்ள செல்கள் ஹெச் சி ஜி என்ற ஹார்மோனை சுரக்கின்றன. அது தாயின் ரத்தத்தில் கலக்கிறது. இந்த ஹார்மோனின் ஒருபகுதி சிறுநீர் வழியாக வெளியேறும். அதைத்தான் இந்த பரிசோதனைகள் கண்டுபிடிக்கின்றன. இது ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று நாட்களுக்கும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

எத்தனை நாட்களில் டெஸ்ட் செய்ய வேண்டும்?

நீங்க கர்ப்பமாக இருக்கிறீர்களா இல்லையா என்பதை வீட்டிலேயே பரிசோதனை செய்துக் கொள்ளலாம். இல்லையெனில், தாய்மை மற்றும் மகப்பேறு மருத்துவரை அணுகியும் அறிந்துக் கொள்ளலாம். தற்போது, வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்யக்கூடிய கருவி மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கி பரிசோதனை செய்து கொள்ளலாம்.

உங்களுக்கு மாதவிடாய் ஏற்படாமல் தள்ளிப் போகும் போது தான் இந்த கர்ப்ப பரிசோதனையை செய்ய வேண்டும். அதாவது ஒரு சில பெண்களுக்கு 25 நாட்களும் ஆகலாம் அல்லது 30 நாட்களும் ஆகலாம். எனவே, உங்களுடைய மாதவிடாய் தேதியை நினைவில் வைத்துக்கொண்டு, தேதி முடிந்து 7 டூ 9 நாட்கள் கழித்து இப்பரிசோதனை செய்யலாம். அப்படி செய்யும்போது அந்த கருவி கர்ப்பத்தின் போது உற்பத்தியான ஹெச்சிஜி ஹார்மோன்களை கண்டுபிடித்துவிடும்

கர்ப்ப பரிசோதனை எப்போது துல்லியமாக இருக்கும்?

உங்களுடைய பீரியட்ஸ் தவறும் முதல் நாள் மற்றும் அதற்கு பின்னர் வீட்டில் செய்யப்பட்டும் கர்ப்ப பரிசோதனை மூலம் 99% சரியான முடிவை காட்டும். கர்ப்பத்தின் ஆரம்பத்தில், காலையில் , முதல் யூரினில் சரியான முடிவு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். ஏனெனில், காலை நேரத்தில் வரும் முதல் யூரினில் அதிக செறிவான தன்மை இருக்கும். எனவே, கர்ப்ப பரிசோதனைக்கு உகந்த நேரம் எது என்று சொன்னால் காலை நேரம் தான் .

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website