மகளிர் உலகக்கோப்பை டி20 -பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி …

February 13, 2023 at 9:29 am
pc

மகளிர் உலகக்கோப்பை டி20 தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

கேப்டன் மரூஃப் அதிரடி 

கேப்டவுனில் நடந்த போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி, 4 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் மரூஃப் 55 பந்துகளில் 68 ஓட்டங்களும், ஆயிஷா நசீம் 25 பந்துகளில் 43 ஓட்டங்களும் எடுத்தனர். 

இந்திய அணியின் தரப்பில் ராதா யாதவ் 2 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா மற்றும் பூஜா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய இந்திய அணி 19 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

https://twitter.com/ICC/status/1624780037353312256?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1624780037353312256%7Ctwgr%5E7403c804b4dbd3c060e98efdec184c39c822b8db%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fnews.lankasri.com%2Farticle%2Findw-won-by-7-wkts-pakw-wc-t20-2023-1676259554

வெற்றியை உறுதி செய்த ஜெமிமா  

ஜெமிமா ரோட்ரிகஸ் இறுதிவரை அட்டமிழக்காமல் 53 (38) ஓட்டங்கள் எடுத்தார். ஷஃபாலி வெர்மா 33 ஓட்டங்களும், ரிச்சா கோஷ் 31 ஓட்டங்களும் எடுத்தனர். பாகிஸ்தானின் நஷ்ரா சந்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

https://twitter.com/ICC/status/1624803783753576449?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1624803783753576449%7Ctwgr%5E7403c804b4dbd3c060e98efdec184c39c822b8db%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fnews.lankasri.com%2Farticle%2Findw-won-by-7-wkts-pakw-wc-t20-2023-1676259554

இன்று மாலை நடக்கும் போட்டியில் அயர்லாந்து – இங்கிலாந்து அணிகளும், இரவு நடக்கும் போட்டியில் தென் ஆப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகளும் மோதுகின்றன.   

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website