மக்களே உஷார்! இவைதான் மாரடைப்பு நோய்களுக்கான அறிகுறிகளாம்!

March 23, 2023 at 9:38 am
pc

கார்டியோவாஸ்குலர் நோய்கள் (CVDs) உலகளவில் அதிகளவிலான இறப்புக்கான முக்கிய காரணம் என WHO கடந்த 11 ம் திகதி யூன் மாதம் அறிக்கை வெளிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் 17.9 மில்லியன் மக்கள் CVD (Cardiovascular diseases)களால் இறந்துள்ளனர்.

இது உலகளாவிய இறப்புகளில் 32% ஆகும். 

இந்த இறப்புகளில், 85% மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக இருக்கிறது.

¼ CVD இறப்புகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் நடைபெறுகின்றன.

இவைதான் மாரடைப்புக்கான 4 அறிகுறிகள்

மார்பு வலி, அழுத்தம், முழுமை, அல்லது அசௌகரியம் ஏற்படல்.

சில சமயங்களில் மாரடைப்பினால் ஏற்படும் வலி திடீரெனவும் தீவிரமாகவும் இருக்கும்.

இதனால் இந்த வலியை எளிதாக அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கை 

மேற்கொள்ள உதவுகிறது.

உங்கள் உடலின் மற்ற பகுதிகளில் அசௌகரியம் ஏற்படல்.

மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் தலைச்சுற்றல்.

குமட்டல் மற்றும் குளிர் வியர்வை ஏற்படல்.

மாரடைப்புக்கு முன் வரும் முக்கியமான அறிகுறிகள் இவைதான்

மார்பின் மையத்தில் வலி அல்லது அசௌகரியம் ஏற்படல்.

கைகள், இடது தோள்பட்டை, முழங்கைகள், தாடை அல்லது முதுகில் வலி அல்லது அசௌகரியம் ஏற்படல்.

கூடுதலாக சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத் திணறல் ஏற்படல்.

குமட்டல் அல்லது வாந்தி.

லேசான தலைவலி அல்லது மயக்கம் ஏற்படல்.

ஒரு விதமான குளிர் வியர்வை மற்றும் வெளிர் நிறமாக உடல் மாறும்.

ஆண்களை விட பெண்களுக்கு மூச்சுத் திணறல், குமட்டல், வாந்தி, முதுகு அல்லது தாடை வலி போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இருதய நோய்கள் மற்றம் மாரடைப்பு நோய்கள் ஏற்பட காரணம் இதுதான்

புகையிலை பயன்பாடு அதிகமாக இருக்கும்போது ஏற்படலாம்.

ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கம் மற்றும் உடல் பருமன் மூலம் ஏற்படும்.

உடல் செயலற்ற தன்மை மற்றும் மதுபானம் அதிகளவில் அருந்துவதால் ஏற்படும்.

இருதய நோய்கள் மற்றம் மாரடைப்பு நோய்களை எவ்வாறு தடுக்கலாம்?

புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும்.

உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்று புகையிலையை எந்த வடிவத்திலும் பயன்படுத்தாமல் இருப்பது..

ஆரோக்கியமான எடையை மற்றும் BMIயை பராமரித்தல்.

உடற்பயிற்சி செய்தல்.

ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுதல்.

தூக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்.

இவைகளை கடைப்பிடித்தால் நமக்கு ஏற்படவிருக்கம் மாரடைப்பு சம்பந்தமான பிரச்சினைகளை தடுக்கலாம்.    

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website