மக்களே உஷார் !! ஏடிஎம் இயந்திரத்திலிருந்து வந்த போலி பணத்தாள்கள்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

பணமெடுக்கப்படும் ஏடிஎம் இயந்திரத்திலிருந்து போலி ரூபாய் நோட்டு வந்துள்ளது காணொளியாக வெளியாகியுள்ளது. இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து 200 ரூபாய் போலி ரூபாய் நோட்டு வெளிவந்துள்ளது.
மேலும் வெளிவந்த நோட்டுகள் அனைத்தும் புது நோட்டாக இருந்துள்ளது. மேலும் நோட்டிலுள்ள ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா என்பதற்கு பதிலாக சில்ட்ரன் பேங்க் ஆஃப் இந்தியா என்றும், ஃபுல் ஆஃப் ஃபன் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அந்த இயந்திரத்தில் பணம் எடுத்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் போலி ரூபாய் நோட்டுக்களே வெளி வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.