மக்களே எச்சரிக்கை ..! தமிழகத்தின் 10 மாவட்டங்களின் இன்று கனமழை பெய்யக்கூடும்…

May 15, 2022 at 3:00 pm
pc

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. 
இந்த நிலையில் இன்று தமிழகத்தின் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டு உள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள . நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம்  தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் கானப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் கலசரப்பாக்கத்தில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டருக்கு காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் வரும் 17 ஆம் தேதி வரை இந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website