மக்களே தெரிஞ்சிக்கோங்க!! தாய் பால் ATM வந்தாச்சு.. மகிழ்ச்சி செய்தி

வளர்ந்து வரும் நவீன உலகில் பின்பற்றப்படும் உணவு பழக்கத்தால் தாய்மார்களுக்கு பால் சுரப்பு குறைந்து, பல குழந்தைகளுக்கு தாய்ப்பால் போதுமான அளவில் கிடைப்பதில்லை. இந்த நிலையிலே குழந்தைகளுக்கு போதுமான தாய்ப்பால் கிடைப்பதற்காக, மருத்துவமனைகளில் தாய்ப்பால் தானமாக பெறப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. இது எந்த நேரமும் கிடைப்பதில்லை. எனவே 24 மணி நேரமும் தாய்ப்பால் கிடைக்கும்படி ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சென்டரில் அமைந்துள்ள தாய்ப்பால் 24*7 ஏடி.எம்.மில் 24 மணி நேரமும் பால் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தன்னார்வலர்களிடமிருந்து பெறப்படும் பாலானது பரிசோதனைக்கு பிறகு விநியோகிக்கப்படுகிறது.