“மதுவால் எனது வாழ்க்கையை இழந்தேன்” – மனிஷா கொய்ராலா உருக்கம்!

July 21, 2023 at 5:33 pm
pc

தமிழில் மணிரத்னம் இயக்கிய பம்பாய், கமல்ஹாசனின் இந்தியன், ஆளவந்தான், அர்ஜுனுடன் முதல்வன், ரஜினிகாந்துடன் பாபா உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து பிரபலமானவர் மனிஷா கொய்ராலா. பாலிவுட்டிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர், ஆனால் இவரது சினிமா வாழ்க்கை திருமணம் ஆனதும் முடிந்துபோனது.

இவர் நேபாள தொழிலதிபர் சாம்ராட் ஹெகலை திருமணம் செய்துகொண்டு இரண்டு ஆண்டுகளிலேயே விவாகரத்தும் பெற்றார். பின் புற்றுநோய் பாதிப்பிலும் சிக்கி சிகிச்சைக்கு பின் மீண்டார்.

அண்மையில் ஒரு பேட்டியில் அவர் பேசும்போது, நான் விவாகரத்து பெற்றதும் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டேன், மதுப்பழக்கத்துக்கு அடிமையானேன்.

மதுப்பழக்கம் காரணமாக எனது மதிப்பு மிக்க வாழ்க்கையை இழந்தேன், மது அருந்துவது பிரச்சனைக்கு தீர்வு ஆகாது, அது நமது உறவுகள் மீது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் என பேசியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website