மனித உரிமை கவுன்சில் விருது -பிரபல யூடியூபர் கோபி சுதாகருக்கு குவியும் பாராட்டு..!!

February 27, 2023 at 1:26 pm
pc

சுதாகர்மற்றும் கோபி  தமிழ் திரையுலகில் பணியாற்றும் பிரபல யூடியூபர் மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். கோபி அரவிந்த் ராஜாவுடன் (மெட்ராஸ் சென்ட்ரல் கோபி) மெட்ராஸ் சென்ட்ரல் சேனலில் வேடிக்கையான வீடியோக்களை உருவாக்கி யூடியூபராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இருவரும் இந்தியஅரசியல்வாதிகள் மற்றும் நடிகர்களைப் பின்பற்றி மிகவும் பிரபலமானார்கள். விஷ்ணு விஜயன் இயக்கத்தில் சுதாகர் மற்றும் கோபி முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர், இந்த படத்தை அவர்களின் சொந்த பரிதாபங்கள்  புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிக்கிறது.
இணையத்தில் கலக்கி வரும் கோபி மற்றும் சுதாகர் .கோபி சுதாகரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. யூடியூபில் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளை மற்றும் சமூக அக்கறையுள்ள கருத்துக்களை நகைச்சுவை மூலம் மக்களிடையே எடுத்துக்கூறும் கலைஞர்கள்.இவர்களுக்கு ஏகப்பட்ட லைக்ஸ் ,கமெண்ட்டுகள்  குவிந்து வருகிறது .இவர்களது வீடியோவை பார்த்தால்  வாழ்க்கையில் இருக்கும் சோகத்தை மறந்து சிரித்துகொண்டிருப்போம் .இவர்களை வெறுப்போர் யாருமே கிடையாது. ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டவர்கள் என சொன்னால் மிகையாகாது .நாள் முழுவதும் இவர்களது வீடியோக்களை பார்க்கும் மக்கள் ஏராளம் இவர்களுக்கு  ஈடு இணை இவர்களே.இவர்களது வசனங்கள் இளையோரின் மொழியாக இருக்கிறது  .மனித உரிமை கவுன்சில் விருது விழாவில் கோபி மற்றும் சுதாகருக்கு விருது கிடைத்தது . இவர்களது பயணம் தொடர வாழ்த்துக்கள். 
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website