மனைவியை கொலை செய்து 40 ஆண்டுகளாக செப்டிக் டேங்கில் மறைத்து வைத்த கொடூரம்…

June 15, 2022 at 6:55 am
pc

பிரித்தானியாவில் பன்றி வளர்ப்பாளார் ஒருவர் மனைவியை கொலை செய்து, உடலை கழிவுநீர் தொட்டியில் மறைத்து வைத்துவிட்டு, காணாமல் போனதாக 40 ஆண்டுகளாக நாடகமாடிவந்தது அம்பலமாகியுள்ளது.

இங்கிலாந்தில் வெஸ்ட் மிட்லண்ட்ஸில் உள்ள வொர்செஸ்டர்ஷையர் கவுன்டியில் நடந்த இந்த சம்பவத்தின் வழக்கு வொர்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

89 வயதான டேவிட் வெனபிள்ஸ் (David Venables) கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அவரது மனைவி பிரெண்டா வெனபிள்ஸை (Brenda Venables) கொலை செய்ததை மறைத்து வழந்துவந்துள்ளார்

வொர்செஸ்டர்ஷையரில் உள்ள அவர்களின் வீட்டிற்கு வெகு தொலைவில் உள்ள கழிவுநீர் தொட்டியில் அவரது உடலை மறைத்து வைத்துள்ளார்.

இந்த கொலை நடந்தது 1982-ல், பிறகு அவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டு 37 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு காலத்தில் கரடுமுரடான, படர்ந்த மற்றும் ஒதுங்கிய இடத்தில் கழிவுநீர் தொட்டியில் அவரது உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன

இது தொடர்பில் வழக்கு தொடர்ந்த, Michael Burrows QC, வெனபிள்ஸ் தனது மனைவி காணாமல் போனதற்கு முன், அவரது தாயின் முன்னாள் பராமரிப்பாளரான லோரெய்ன் ஸ்டைல்ஸுடன் (Lorraine Styles) ஒரு தொடர் உறவில் இருந்ததாகக் கூறினார்.

அப்போது 49 வயதான வெனபிள்ஸ், 48 வயதான தனது மனைவியைக் கொன்று, 1961-ஆம் ஆண்டு முதல் தம்பதியர் வசித்து வந்த கெம்ப்சேயின் பெஸ்ட்மேன்ஸ் லேனில் உள்ள ‘ரிமோட்’ குவாக்கிங் ஹவுஸ் ஃபார்ம் மைதானத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் அவரது உடலை வீசிவிட்டார் என்று நீதிமன்றம் குற்றம் சாட்டியது.

லோரெய்ன் ஸ்டைல்ஸ் உடனான நீண்டநாள் உறவை எந்த தடையும் இன்றி தொடர விரும்பிய அவர், தனது மனைவியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மே 4, 1982-ல் வொர்செஸ்டர் காவல் நிலையத்தில் தனது மனைவியைக் காணவில்லை என்று வெனபிள்ஸ் புகாரளித்துள்ளார்.

2019 வாக்கில், வெனபிள்ஸ் பண்ணையை தனது மருமகனுக்கு விற்றார், அந்த ஆண்டு ஜூலையில், செப்டிக் டேங்கை அகற்றும் தொழிலாளர்கள் மனித மண்டை ஓடு உட்பட எலும்புகளைக் கண்டறிந்தனர்.

டிஎன்ஏ சோதனை அது பிரெண்டா வெனபிள்ஸ் என்பதை உறுதிப்படுத்தியது. இன்று இந்த வழக்கு நீதிமனற விசாரணைக்கு வந்தபோது, இன்னும் அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை, ஆறு வாரங்கள் நீடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website