மனோபாலாவின் வீடியோவைப் பார்த்து மனமுடைந்து போகும் ரசிகர்கள்…..!

May 9, 2023 at 11:14 am
pc

இயக்குனரும் நகைச்சுவை நடிகருமான மனோபாலா கடந்த வாரம் உயிரிழந்த நிலையில் அவர் இறுதியாக தனது மகனுடன் இருந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் மனோபாலா

பாரதிராஜா இயக்கத்தில் 1979ஆம் ஆண்டு புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தில் துணை இயக்குனராக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் தான் மனோபாலா.

மனோபாலாவின் கடைசி நிமிடங்கள்

அதற்குப்பின்னர் பல படங்களை தயாரிக்க ஆரம்பித்தார். வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டிலும் தனது ஆதிக்கத்தை கொடி கட்டிப் பறக்க விட்டவர் இவர்.

இவர் நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து 40 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் வாழந்திருக்கிறார். மனோபாலா 14 திரைப்படங்களையும் 19 சின்னத்திரை தொடர்களையும் இயக்கியிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். இவ்வாறு சிகிச்சைப் பெற்று வந்த மனோபாலா கடந்த வாரம் 3ஆம் திகதி கல்லீரல் பிரச்சினைக்காரணமாக தனமு 69 வயதில் உயிரிழந்தார்.

மனோபாலாவின் கடைசி நிமிடங்கள்

இறுதி நிமிடங்கள்

உயிரிழந்த மனோபாலாவின் உடலுக்கும் திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் மனோபாலாவின் கடைசி வீடியோ ஒன்று அனைவரையும் அழவைத்திருக்கிறது.

அந்த வீடியோவில் மனோபாலா சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த போது மனோபாலாவின் மகனுடன் பாடல் பாடி ஊக்கப்படுத்தும் வீடியோ தான் அது.

மனோபாலாவின் கடைசி நிமிடங்கள்

ஒருவர் மனோபாலாவிடம் பாடல் ஒன்றை பாடுமாறு கேட்க பாடமுடியாமல் இருந்த மனோபாலாவிற்கு பாடல் ஒன்றை எடுத்துக் கொடுக்க தொடர்ந்தும் அவரின் மகன் பாடல் பாட மற்றொருவர் சாப்பாடு ஊட்டி விடுகிறார்.

குறித்த வீடியோ Manobala’s Waste paper என்ற யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது பார்ப்பவர்களை மிகவும் கவலையடைய வைத்திருக்கிறது.

எப்படியெல்லாம் சிரிக்க வைத்த மனுசனுக்கு இப்போ இப்படியொரு நிலைமையா என்று கண்கலங்கி இருக்கிறார்கள்.  

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website