மயில்சாமியின் கடைசி படம் உள்பட 8 படங்கள் ரிலீஸ்.

February 20, 2024 at 7:31 pm
pc

பிரபல காமெடி நடிகர் மயில்சாமி கடந்தாண்டு காலமான நிலையில் அவர் நடித்த கடைசி படம் உள்பட 8 திரைப்படங்கள் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரை உலகில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மூன்று அல்லது நான்கு படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த வாரம் 8 படங்கள் வெளியாக இருப்பதாகவும் அனைத்தும் சின்ன பட்ஜெட் படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1. ஜீவன், மல்லிகா ஷெராவத் நடிப்பில் வடிவுடையான் இயக்கத்தில் உருவான ’பாம்பாட்டம்’ என்ற திரைப்படம் வரும் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

2, அதேபோல் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் உருவான ’தி பாய்ஸ்’ என்ற படம் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளது.இந்த படத்தில் சந்தோஷ் ஜெயக்குமார், சாரா, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படமும் வழக்கம் போல் சந்தோஷின் அடல் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது.

3. வைபவ் நடித்த ’ரணம்’ என்ற திரைப்படமும் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. கிரைம் த்ரில்லர்ராக உருவாகி இருக்கும் இந்த படம் படத்தில் நந்திதா ஸ்வேதா நாயகியாக நடித்துள்ளார்.

4. ஜான் கிளாடி என்பவர் இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா எலன், விஜி சேகர் உள்பட பலர் நடித்த ’பைரி’ என்ற திரைப்படம் வரும் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. புறா பந்தயத்தை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதை உருவாகியுள்ளது.

5. சமீப காலமாக காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் அவர் ஹீரோவாக நடித்த இன்னொரு திரைப்படமான ’வித்தைக்காரன்’ வரும் 23ஆம் தேதி வெளியாகிறது. சிம்ரன் குப்தா, ஆனந்தராஜ், சுப்பிரமணிய சிவா உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

6. ஸ்ரீகாந்த் வெங்கடேஷ் என்பவர் இயக்கிய ’ஆபரேஷன் லைலா’ என்ற திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. இமான் அண்ணாச்சி, வனிதா விஜயகுமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் ஒரு திரில்லர் படமாக உருவாக்கி உள்ளது.

7. மறைந்த நடிகர் மயில்சாமி கடைசியாக நடித்த ’கிளாஸ்மேட்’ என்ற திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஒரு வெளியாகிறது. குட்டிப்புலி சரவணன் சக்தி இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் அங்கையர் கண்ணன், அபி நட்சத்திரா, சரவணா சக்தி உள்பட பலர் நடித்துள்ளனர்.

8. விக்ரமன் ஸ்ரீதரன் என்பவர் இயக்கத்தில் உருவான ’பர்த் மார்க்’ என்ற திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் டான்சிங் ரோஸ் என்ற கேரக்டரில் எடுத்த சபீர் மற்றும் ’ஜெயிலர்’ படத்தில் ரஜினி மருமகளாக நடித்த மிர்ணா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

மேற்கண்ட 8 படங்களும் இந்த வாரம் வெளியாக உள்ளதை அடுத்து இதில் எந்தெந்த படங்கள் வெற்றி வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website