மருத்துவ படிப்பு வேண்டாம் என தூக்கி எறிந்து விட்டு நடிக்க வந்த 6 பிரபலங்கள்!

சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் பலருக்கு அந்த வாய்ப்பை கிடைப்பதில்லை. ஆனால் ரஜினி போன்ற சிலர் வேறு தொழில் செய்து கொண்டிருக்கும் போது அதிர்ஷ்டவசமாக சினிமா வாய்ப்பு கிடைத்து அதில் ஜொலித்தவர்களும் உண்டு. இதில் என்ன ஆச்சரியம் என்றால் எம்பிபிஎஸ் படித்துவிட்டு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் மருத்துவத்தை விட்டு நடிகர்கள் ஆகிய பிரபலங்களை பார்க்கலாம்.
சாய் பல்லவி : மலையாளம், தமிழ் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் சாய் பல்லவி. இவர் வெளிநாட்டில் மருத்துவ படிப்பை முடித்திருக்கிறார். நடனத்தின் மீதுள்ள ஆர்வத்தால் உங்களில் யார் பிரபுதேவா நிகழ்ச்சியில் பங்கேற்ற சாய் பல்லவி அதன் பிறகு சினிமாவில் வாய்ப்பை பெற்றார்.
அதிதி ஷங்கர் : பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் தான் அதிதி ஷங்கர். இவர் வெளிநாட்டில் மருத்துவம் படித்து முடித்த நிலையில் சினிமாவில் நடிகையாக வேண்டும் என்று அடம்பிடித்து நடிக்க வந்தார். அதன்படி கார்த்தியின் நடிப்பில் வெளியான விருமன் படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.
அஜ்மல் அமீர் : அஞ்சாதே, கோ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றவர் தான் அஜ்மல். இவர் உக்ரேனில் உள்ள நேஷனல் பைரோகோவ் மெமோரியல் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் முடித்துள்ளார். ஆனாலும் சினிமா மீது உள்ள ஈடுபாடு காரணமாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
மனுசி சில்லார் : தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்த இவர் இப்போது தமிழில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். 2015 ஆம் ஆண்டு ஹரியானாவில் பகத் ஃபுல் உமன் மெடிக்கல் காலேஜில் எம்பிபிஎஸ் முடித்துள்ளார். அதோடு 2017 ஆம் ஆண்டு மிஸ் வேர்ல்ட் டைட்டிலையும் பெற்றிருக்கிறார்.
ஸ்ரீ லீலா : கன்னடம், தெலுங்கு படங்களில் மிகவும் புகழ்பெற்ற நடிகை தான் ஸ்ரீலீலா. சமீபத்தில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தில் நடித்திருந்தார். மருத்துவராக ஆசைப்பட்ட ஸ்ரீலிலா 2021 ஆம் ஆண்டு தனது மருத்துவ படிப்பை முடித்தார். அதன் பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க நடிகை ஆகிவிட்டார்.
பரத் ரெட்டி : தெலுங்கு, தமிழ் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பரத் ரெட்டி. இவர் தமிழில் உன்னை போல் ஒருவன், விசுவாசம், விவேகம் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். மருத்துவ படிப்பை முடித்து இருதய நிபுணராக சில காலம் பணிபுரிந்து இருக்கிறார்.