மறந்தும் கூட பீட்சா உடன் இதை சேர்த்து சாப்பிடாதீங்க உயிருக்கே ஆபத்தாகி விடும் …!!

December 27, 2022 at 7:23 am
pc

பெரும்பாலானோர், பசிக்காக உணவு உண்பதை விட ருசிக்காக உணவு உண்ணுவதாக எண்ணி வருகின்றனர். ஆனால், இது முற்றிலும் தவறு. பழங்காலத்தில் ஏராளமான உணவு முறைப் பழக்கங்கள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மைகளைப் பயப்பவையாக அமைந்தது. ஆனால் ருசிக்காகவும், சீக்கிரமாக செய்து முடிக்கும் உணவு எனவும், ஃபாஸ்ட் புட், பீட்சா, பர்கர் உள்ளிட்ட ஏராளமான உணவுப் பழக்க வழக்கங்களுக்கு மாறி வருகின்றனர். இதனால், நம் உடல் ஆரோக்கியம் கெடுவதுடன் உயிரையும் மாய்த்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய நவீன உலகத்தில், ஆர்டர் செய்து உடனடியாக சாப்பிடும் உணவுப் பொருள்களின் வகையில் பீட்சாவும் ஒன்று. ஒருவர், இருவர் அல்ல. பீட்சாவிற்கு ஏராளமான பிரியர்கள் உள்ளனர். ஆனால், இவற்றை ஆர்டர் செய்யும் போதோ, வீட்டிலேயே செய்து உண்ணும் போதோ இதற்கு சைடு டிஷ் ஆக கொக்கோ கோலாவை பயன்படுத்துகின்றனர். ஆனால், ஒரு சில உணவு வகைகளோடு, அதற்கு எதிர்மறையான உணவையும் சேர்த்து சாப்பிட்டால் நாம் பல்வேறு விளைவுகளைச் சந்திக்க நேரிடும். அந்த வகையிலேயே இந்த பீட்சா, கொக்கோ கோலா காம்பினேஷனும் அடங்கும்.

பீட்சா, கோகோ கோலா இரண்டும் பார்ப்பதற்கும் அருந்துவதற்கும் நன்றாக தோன்றினாலும், இது உடலுக்கு தீமை தரக்கூடிய ஒண்றாகும். இதனால், நம் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. பீட்சா மட்டுமல்லாமல், இது போன்ற சீஸ் உணவுகளுடன் குளிர் பானத்தைக் குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஒரு முழு பீட்சாவை கோகோ கோலாவுடன் சாப்பிட்டால், சாப்பிட்டது போல உணர்வை நமக்குத் தராது. இதற்கு கோகோ கோலாவில் உள்ள கார்போஹைரேட்டுகளே காரணம்.

பீட்சா உடன் கோகோ கோலா குடிப்பதால் உண்டாகும் விளைவுகள்

பீட்சா சாப்பிடும் போது கோகோ கோலா குடிப்பதால் கீழ்க்கண்ட விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

செரிமானம் அடைவதையும் மிகவும் தாமதப்படுத்துகிறது.

தவறான பசியைத் தூண்டுகிறது.

இதனால், மனநிறைவு குறைந்து, அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

இது போல, சர்க்கரை உட்கொள்வது அதிகப்படியான கொழுப்புடன், உயர் இரத்த அழுத்தத்தை உண்டாக்குகிறது. இவை அனைத்துமே இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகளாகும். இதனால், இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகவும் அமைகிறது.

எனவே, பீட்சா, கோகோ கோலா இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவதை முழுவதுமாக நிறுத்திக் கொள்வது சிறந்தது. முடிந்த வரை, இது போன்ற சீஸ் உணவுகளையும், கடைகளில் வாங்கி குடிக்கும் குளிர் பானங்களையும் தவிர்ப்பது உடல் நலத்திற்கு கேடு வருவதிலிருந்து தவிர்க்கலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website