மாணவிகளிடம் நிர்வாண வீடியோ கால்.. பா.ஜ.க பிரமுகரின் லீலைகள் அம்பலம்!

June 12, 2022 at 10:17 pm
pc

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியின் சேர்மனும் பா.ஜ.க நிர்வாகியுமான தாஸ்வின் ஜான் கிரேஸ் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மாணவி ஒருவரிடம் வீடியோ காலில் நிர்வாணமாக ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. 

அந்த வீடியோ தற்போது சக மாணவிகளிடம் பரவியதால் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அக்கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவரும் இதுதொடர்பாக எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதனைக் கண்டித்து மாணவிகள், தர்ணாவில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அங்கு போலிஸார் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மாணவிகள் போராட்டத்தை கலைத்தனர். 

தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலிஸார் தாஸ்வின் ஜான் கிரேசை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தாஸ்வின் ஜான் கிரேஸ் பாஜக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக பாஜக மேலிடம் அறிவித்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website