மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது!

May 7, 2022 at 7:29 am
pc

கனடாவில் பியானோ இசைக்கருவியை இசைக்க கற்றுதரும் ஆசிரியர் ஒருவர் கைதான நிலையில் அவர் மீது முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Okanagan-ஐ சேர்ந்தவர் நீல் நீன். இவர் பியானோ ஆசிரியர் ஆவார். இந்த நிலையில் தன்னிடம் பியானோ இசைக்கருவியை இசைக்க கற்று கொள்ள வந்த மாணவியிடம் நீல் அத்துமீறியுள்ளார்.

இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் அவரை கடந்தாண்டு கைது செய்தனர். பின்னர் நிபந்தனை ஜாமீனில் நீல் விடுவிக்கப்பட்டார்.

கனடாவில் 10 நாட்களாக காணாமல் போன தமிழ்ப்பெண்! அவர் குறித்து புகைப்படத்துடன் வெளியான முக்கிய தகவல்

கடந்த 22ஆம் திகதி வரை அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் எதுவும் பதியப்படாத நிலையில் தற்போது தன்னிடம் பயிலும் மாணவ, மாணவியிடம் பாலியல் தாக்குதல் நடத்தியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

அவரால் மேலும் சில மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் நீல் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website