மாதத்தின் முதல் நாளில் வந்த நல்ல செய்தி!சிலிண்டர் விலை குறைப்பு!

July 1, 2022 at 10:46 am
pc

இன்று சிலிண்டர் விலை 198 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் வேதனை!

ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றியமைப்பது வழக்கம். சில மாதங்களில் இரண்டு முறை கூட மாற்றியமைக்கப்படும். விலை குறைவு என்பது பெரும்பாலும் இருக்காது. ஒவ்வொரு மாதமும் விலை ஏறிக் கொண்டே தான் செல்கிறது. ஆனால் இந்த மாதம் சற்று ஆறுதல் கிடைத்துள்ளது.

198 ரூபாய் குறைப்பு!

ஜூலை 1ஆம் தேதி (இன்று) வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 198 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. 

விலை நிலவரம்!

புதிய விலை மாற்றத்தின் படி சென்னையில் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.2186 ஆக உள்ளது.

சென்னை – ரூ.2186

மும்பை – ரூ.1981

கொல்கத்தா – ரூ.2140

டெல்லி – ரூ.2021

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டிருந்தாலும் வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website