மாம்பழ சீசனுக்கு ஏற்ற தித்திக்கும் மாம்பழ அல்வா செய்யலாம் வாங்க …..!!

June 17, 2022 at 2:51 pm
pc

அல்வா யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். அதிலும் மாம்பழத்தில் செய்வது என்றால் அடடடா… சுவையோ சுவை.. மிகவும் எளிமையான முறையில் மாம்பழ பிரியர்களுக்கும், அல்வா பிரியர்களுக்கும் ஒரே நேரத்தில் விருந்து வைக்கும் சுவையான ஒரு ஸ்வீட் ரெசிபி.. தித்திக்கும் மாம்பழ அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

மாம்பழ கூழ் – 1 கப்

சர்க்கரை/வெல்லம் – 1/2 கப்

கோதுமை மாவு – 2 டீஸ்பூன்

ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்

உப்பு – ஒரு சிட்டிகை

நெய் – 1/4 கப்

முந்திரி பருப்பு – 5

செய்முறை:

மாம்பழத்தை தோல் நீக்கி நன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து கூழ் எடுத்துக் கொள்ளவும்.

ஒரு அடி வலுவான கடாயை சூடாக்கி, அதில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து, முந்திரி பருப்பை வறுத்து, அதிகப்படியான நெய்யை வடிகட்டி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.

அதே நெய்யில் மேலும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து, பிறகு கோதுமை மாவு சேர்க்கவும்.

மிதமான தீயில் ஒரு நிமிடம் வதக்கி, அதில் மாம்பழ கூழை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, தொடர்ந்து கலக்கவும்.

பின்னர், மீண்டும் சிறிதளவு நெய் சேர்த்து கிளறவும். தொடர்ந்து கிளறிக்கொண்டே இருங்க, அல்வா சிறிது கெட்டியானதும், சர்க்கரை அல்லது வெல்லத்தை சேர்த்து நன்றாக கலக்கவும்.

அல்வா இப்போது கடாயில் ஒட்டாமல் சுருண்டு வர ஆரம்பித்தவுடன், ஏலக்காய் தூள், சிறிதளவு உப்பு சேர்க்கவும்.

இப்போது அல்வா நிலைத்தன்மைக்கு வந்தவுடன், அடுப்பை அணைத்து, வறுத்த வைத்திருந்த முந்திரி பருப்பை சேர்த்து, நன்றாக கலக்கவும்.

சுவையான, தித்திக்கும் மாம்பழ அல்வா ரெடி

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website