மாறி மாறி நன்றி சொன்ன எஸ்.ஜே.சூர்யா.

February 22, 2024 at 7:49 pm
pc

தனுஷ் நடித்து இயக்கும் 50-வது திரைப்படமான ‘ராயன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த எஸ்ஜே சூர்யாவின் போஸ்டர் நேற்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது.

எஸ் ஜே சூர்யா ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் என்றால் அந்த படத்தின் ஹீரோவையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு அவர் தனது நடிப்பை வெளிப்படுத்துவார் என்பதும் அதனால் தான் அவரை நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர் என்பதும் தெரிந்தது.

அந்த வகையில் ’ராயன்’ படத்திலும் தனுசுக்கு இணையாக அல்லது தனுஷ்-ஐ விட சூப்பராக எஸ் ஜே சூர்யா நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நேற்றைய போஸ்டர் அதை உறுதி செய்தது.

இந்த போஸ்டரை வெளியிட்டு தனுஷ் கூறியபோது, ‘உங்களை இயக்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறிய நிலையில் அதற்கு பதில் அளித்த எஸ்ஜே சூர்யா உங்கள் இயக்கத்தில் நான் நடித்தது எனக்குத்தான் பெருமை, இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் ஏற்கனவே கூறியபடி ’ராயன்’ ஒரு சர்வதேச தரமுடைய திரைப்படம். வரும் கோடை விடுமுறையில் இந்த படத்தை பார்க்க நான் ஆவலுடன் உள்ளேன். சன் பிக்சர்ஸ் மற்றும் உங்களுடைய டீமுக்கு எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.

தனுஷ் மற்றும் எஸ் ஜே சூர்யா மாறி மாறி நன்றி கூறி கொண்ட இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website