மாலைநேர ஸ்னாக்ஸ்க்கு பாப்கார்ன் பக்கோடா சமைக்கலாம் வாங்க …!!

August 16, 2022 at 6:50 am
pc
தேவையான பொருட்கள் :

கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 2 கப்
காய்ந்த மிளகாய்த்தூள் – அரை டீ ஸ்பூன்
கரம் மசாலா – கால் டீ ஸ்பூன்
பாப்கார்ன் – 1 பாக்கெட்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :
  • அகலமான பாத்திரத்தில் கடலை மாவு ,அரிசி மாவு ,மிளகாய்த்தூள் ,கரம் மசாலா ,உப்பு சேர்த்து ஒன்று சேர புரட்டி கொள்ளவும் .
  • பின்னர் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்து கொள்ளவும் .
  • பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெயை காயவைத்து கொள்ளவும்
  • பிறகு ஒவ்வொரு பாப்கார்னாக எடுத்து மாவு கலவையில் முக்கி எடுத்து மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்
  • சுவையான பாப்கார்ன் பகோடா தயார்
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website