மாவிலை தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் ஏற்படும் அதிசயங்கள் என்னென்ன தெரியுமா …?

மாம்பழம் நல்ல சுவையை கொடுப்பதோடு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. அதுபோல மா மரத்தின் இலைகளும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. மாமர இலைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி உட்பட பல்வேறு ஆரோக்கிய சத்துக்களும் ஊட்டச்சத்துகளும் நிறைந்து காணப்படுகிறது. மாம்பழ இலைகள் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகளை கொண்டுள்ளது.
இதில் இருக்கக்கூடிய ஃபிளாவனாய்டுகள் மற்றும் பீனால்கள் அதிக ஆக்சிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாக மாமர இலைகள் இருக்கிறது. மாமர இலைகளில் பைட்டோகெமிக்கல் உள்ளது. இது நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. மா மர இலைகளை உலர்த்தி பொடி செய்து பயன்படுத்தும் பொழுது நீரிழிவு நோய்க்கு நல்ல சிறந்த தீர்வை கொடுக்கிறது.
மாமர இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் தேயிலையும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. மாமர இலைகளை ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் இந்த தண்ணீரை வடிகட்டி குடிக்கும் பொழுது நல்ல பலனைக் கொடுக்கிறது. மாமர இலைகள் உயர் ரத்த அழுத்த எதிர்ப்பு பண்புகளை கொண்டு இருப்பதால் இது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
இது ரத்த நாளங்களை வலுப்படுத்தவும் சேதமடைந்த நரம்புகளை ஆரோக்கியப்படுத்தவும் உதவுகிறது. மாங்காய் இலைகளில் இருக்கும் மாங்கிஃபெரின் என்ற பைட்டோ கெமிக்கல் பதட்டத்தை குறைக்கிறது. மா மர இலைகள் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. நிழலில் உலர்த்தி எடுத்த மா மர இலைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வையுங்கள்.
இந்தத் தண்ணீரை காலையில் குடித்து வரும் பொழுது பித்தப்பை மற்றும் சிறுநீரகக் கற்கள் குணமாக உதவும். மாமர இலைகள் சுவாச பிரச்சினைகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது. சளி, மூச்சு குழாயில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கிறது. மாமர இலைகளை தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைத்து அந்தத் தண்ணீரை எடுத்து அதில் தேன் கலந்து குடித்துவர இந்த பிரச்சினைகள் சரியாகும்.
அது போல இருமல் பிரச்சினை இருந்தாலும் உடனடியாக குணமடையும். வயிற்றுப்போக்கு பிரச்சினையை சரி செய்யக்கூடியது மா மர இலைகள். மா மர இலைகளை உலர்த்திப் பொடியாக்கி ஒரு நாளைக்கு 2 லிருந்து 3 முறை தண்ணீரோடு கலந்து சாப்பிட்டு வர வயிற்றுப் போக்கு நிற்கும்.