மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய அஜித்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குக் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடித்து 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருத்தவர் இளம் நடிகர் அர்ஜுன் தாஸ்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘மாஸ்டர் திரைப்படம் பார்த்துவிட்டு அஜித் சார் கால் பண்ணி, நல்ல பண்ணிருக்கீங்கனு சொன்னார்’ என அர்ஜுன் தாஸ் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
அஜித் பற்றி அர்ஜுன் தாஸ் பேசிய இந்த விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.