மின்னல் வேகத்தில் பறந்து கேட்ச்! வைரலாகும் சுரேஷ் ரெய்னாவின் வீடியோ

September 29, 2022 at 6:51 pm
pc

அவுஸ்திரேலிய வீரரின் கேட்சை பாய்ந்து பிடித்த சுரேஷ் ரெய்னா

துடுப்பாட்டத்தில் 11 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த ரெய்னா 2 கேட்களை அபாரமாக செய்தார் 

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் சுரேஷ் ரெய்னா கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ராஜ்புரில் அவுஸ்திரேலியா லெஜெண்ட்ஸ், இந்தியா லெஜெண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியா லெஜெண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலியா நிர்ணயித்த 172 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்கள் எடுத்தது. 

அதிகபட்சமாக நமன் ஓஜா 62 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 90 ஓட்டங்கள் விளாசினார். அதிரடியில் மிரட்டிக் கொண்டிருந்த பென் டன்க் 46 ஓட்டங்களில் இருந்தபோது, அவர் அடித்த ஷாட்டை சுரேஷ் ரெய்னா மின்னல் வேகத்தில் பாய்ந்து கேட்ச் செய்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டதால் சோகத்தில் இருந்த ரெய்னா ரசிகர்கள் இந்த கேட்சை பார்த்து ஆர்ப்பரித்தனர். மேலும் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.   

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website