மீசை, தாடி வேகமாக வளர வைக்க உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் ….!!

பொதுவாக ஆண்களுக்கு தாடி, மீசை வளர்ப்பது மிகவும் பிடித்தமான ஒரு விஷயம். பெண்களுக்கு எப்படி ஒரு சிலருக்கு மட்டும் தலைமுடி வளர்ந்துக் கொண்டே போகிறதோ அதேபோல் ஒரு சில ஆண்களுக்கு இயற்கையாகவே தாடி, மீசை அடர்த்தியாக வளரும். ஆனால், சில ஆண்களுக்கு அவர்கள் என்ன தான் முயற்சி செய்து பார்த்தாலும் மீசை, தாடி என்பது வளரவே வளராது.
உண்மையை சொல்லப்போனால், ஆண்களுக்கு அழகைச் சேர்ப்பதே மீசை மற்றும் தாடி இரண்டும் தான். அதிலும் இப்போது மீசை, தாடி வைப்பது என்பது ஒரு ட்ரெண்டாகவே மாறிவிட்டது. இதை பார்க்கும்பொழுது, மீசை, தாடி வளராத அல்லது இல்லாத ஆண்கள் எனக்கு வளரவில்லையே என்று சற்று கவலைப்படுவதுண்டு. ஆனால், இனி அந்த கவலை வேண்டாம்.
இந்த டிப்ஸை மட்டும் நீங்க கடைப்பிடித்து வந்தாலே போதும். உங்களுக்கும் அடர்த்தியான கருமையான மீசை, தாடி வளரும். சரி, அப்படி என்ன டிப்ஸ் வாங்க பார்க்கலாம்.
மீசை, தாடி வேகமாக வளர டிப்ஸ்!
டிப்ஸ் 1: இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை கொண்டு முகத்தில் ஆவிப்பிடிக்கவும். ஆவிப்பிடித்த பிறகு முகத்தை சுத்தமாக துடைத்துவிட்டு, ஆமணக்கு எண்ணெயை அதாவது விளக்கெண்ணெயை தாடி மற்றும் மீசை வளரும் இடத்தில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
அதை இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து அடுத்த நாள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவிவிட வேண்டும். இதை தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கண்டிப்பாக மீசை மற்றும் தாடி வளர ஆரமித்து விடும்.
டிப்ஸ் 2: முதலில் ஒரு பெரிய வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின்னர், அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு விட்டமின் இ மாத்திரை, ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு, நன்றாக கலக்கி கொள்ளவும்.
இதை இரவு தூங்குவதற்கு முன்பு தாடி, மீசை வளரும் இடத்தில் தடவி மறுநாள் காலை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதை தொடர்ந்து பத்து நாட்களாவது தவறாமல் செய்து வந்தால் கண்டிப்பாக உங்களுக்கு அடர்த்தியான, கருமையான மீசை, தாடி வளர்ந்து விடும்.
டிப்ஸ் 3: விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் இரண்டையும் சமஅளவு கலந்து இரவு தூங்க செல்வதற்கு முன்பு, தாடி, மீசை வளரும் இடத்தில் தடவி மறுநாள் காலை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். மேலே கூறியபடி முதலில் ஆவிப்பிடித்து கொள்ள வேண்டும். அதன்பிறகு தான் எண்ணெயை தடவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர தடைபட்டு நின்ற மீசை, தாடி முடிகள் மீண்டும் வளர தொடங்கும்.
டிப்ஸ் 4: பொதுவாக சின்ன வெங்காயத்திற்கு முடி வளர்ச்சியை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, மீசை தாடி வேகமாக வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் சிறிதளவு சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து மீசை, தாடி வளரும் இடத்தில் தடவி 5 நிமிடம் நன்றாக மசாஜ் செய்து வந்தால் கூடிய விரைவில் மீசை, தாடி வளர ஆரமிக்கும்.