மீண்டும் இணைய போகிறது மாமன்னன் குழு .. 2024இல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

September 30, 2023 at 3:40 pm
pc

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’மாமன்னன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் நடித்த உதயநிதி, வடிவேலு மற்றும் பகத்பாசில் ஆகிய மூவருக்கும் பாராட்டுக்கள் குவிந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

Fahad Fazil’s exceptional performance in the Tamil film Maamannan has taken social media by storm

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்த பகத் பாசில் மற்றும் வடிவேலு ஆகிய இருவரும் ஒரு திரைப்படத்தில் மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் தான் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர் என்பதும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கும் என்றும் முழுக்க முழுக்க காமெடி கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் வடிவேலுவை மீண்டும் பழைய வடிவேலுவாக பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே வடிவேலு தனது இரண்டாவது இன்னிசை ஆரம்பித்துள்ள நிலையில் அவரது ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு சிறப்பான விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் நடிப்பு அரக்கன் பகத் பாசில் இந்த படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு இந்த படம் ஒரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website