மீண்டும் லவ்.. சமந்தா சொன்ன பதில்! 250 கோடி ஜீவனாம்சம் வாங்கினேனா?

நடிகைகள் சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த ஆண்டு திடீரென விவாகரத்து அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இவர்களின் பிரிவுக்கான காரணம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவின.
சமீபத்தில், சமந்தா கரணுடன் ஒரு காஃபி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, நீங்கள் மீண்டும் காதலிப்பீர்களா என்று கேட்கப்பட்டது. இல்லை என்று பதிலளித்தார்.
மேலும் சமந்தா இதயத்திற்கு செல்ல என்ன வழி என கரண் ஜோகர் கேட்க ‘அது மூடப்பட்டு இருக்கிறது. U டர்ன் எடுத்து போய்டுங்க’ என தெரிவித்து இருக்கிறார்.
அது மட்டுமின்றி தான் 250 கோடி ருபாய் ஜீவனாம்சம் வாங்கியதாக வந்த வதந்தியை பார்த்து வருத்தப்பட்டதாகவும், எப்போது இன்கம் டேக்ஸ் அதிகாரிகள் வருவார்கள் அவர்களிடம் என்னிடம் எதுவுமே இல்லை என காட்டுவதற்காக காத்திருந்தேன் என காமெடியாக பதில் அளித்து இருக்கிறார்.