மீதமான இட்லி இருக்கா …?அப்போ சுவையான பிரியாணி செஞ்சி அசத்துங்க …..!!

July 1, 2022 at 1:35 pm
pc

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு:

ஏலக்காய் – 3

கிராம்பு – 3

இலவங்கப்பட்டை – 1

மற்ற பொருட்கள்:

இட்லி – 5

தக்காளி – 2 நறுக்கியது

பீன்ஸ், உருளைக்கிழங்கு, கேரட் கலவை – 3/4 கப்

வெங்காயம் நறுக்கியது- 1/2 கப்

இஞ்சி, பூண்டு விழுது – 1/4 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

சில்லி பவுடர் – 1 டீஸ்பூன்

கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

ஆயில் – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி இலை – தேவைக்கு ஏற்ப

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

❖ முதலில் கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் மூன்றையும் மிக்ஸியில் போட்டு கொறகொறப்பாக அரைத்து கொள்ளவும்.

❖ ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

❖ பின் நம்ப அரைத்து வைத்த அந்த மசாலாவை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதில் நறுக்கிய காய்கறிகள், கரம் மசாலா, தக்காளி, மிளகாய் தூள், உப்பு ஆகிவற்றை சேர்க்கவும்.

❖ குறிப்பு: காய்கறிகளை முதலில் போட்டு வெந்தவுடன் பிறகு மற்ற பொருட்களை சேர்க்கவும்.

❖ இவற்றையெல்லாம் நன்றாக வதக்கி, ஒரு மூடி கொண்டு மூடிவிடுங்கள். இதை மிதமான தீயில் 5 நிமடங்கள் வரை வேக விடவும்.

❖ பின்னர் இட்லியை சேர்க்கவும். இட்லியை அப்படியே சேர்க்க கூடாது. சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி தான் போட வேண்டும். இதை 3 நிமிடங்கள் வரை நன்றாக வதக்கி, தீயை அனைத்து விடுங்கள்.

❖ இப்போது நறுக்கிய கொத்தமல்லி இலையை மேலே தூவி சூடாக ரைதாவுடன் பரிமாறவும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website