முகத்திற்கு ஆவி பிடிப்பதில் இவ்ளோ விஷயம் இருக்கா ….! ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் …!!

December 27, 2022 at 7:08 am
pc
  • காற்றில்உள்ளமாசுக்கள் காரணமாக (pollution)
  • சருமத்துளைகளில் சேரும் மாசுக்கள், சருமத்தை பொலிவிழக்கச் செய்யும். இத்தகைய மாசுக்களை அகற்றி, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சி பெறும் வகையில் சுத்தம்செய்யவும்,சருமத்துளைகளில் வெளிப்படும் எண்ணெய்த்தன்மை காரணமாக முகம்பொலிவிழப்பதை தடுக்கவும்,
  • முகப்பரு மற்றும் acne போன்றவற்றால் ஏற்படும் தாக்கத்தை கட்டுக்குள் வைக்கவும்,
  • மூக்கின்மேல் சொரசொரப்பாக தோன்றும் கரும்புள்ளிகள் (blackheads) மற்றும் வெள்ளை புள்ளிகளும் (whiteheads) நீங்கி முகம் பளிச்சிடவும்,முகத்திற்கு தேவையான இரத்த ஓட்டம் சீராவதால்
  • முதுமை தோற்றத்தை தள்ளி வைக்கவும்,மேலும் மூக்கடைப்பு, ஜலதோஷம் போன்று
  • சுவாசத்திற்கு சிரமம் தரக்கூடிய சில பிரச்சினைகளில்உடனடி தீர்வு தரக்கூடியது… என ஆவி பிடிப்பதற்கு
  • பல நல்ல பலன்கள் உண்டு.

நம் முகத்திற்கு பொலிவினை தரக்கூடிய steaming பற்றி பார்க்கலாம்.
ஒரு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீரை கொதிக்க வையுங்கள்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன், மஞ்சள்தூள் 1/2sp அளவுபோட்டு, உடனே,கனத்த துண்டு, கொண்டு ஆவி முகத்தில் படும்படி , கண்களைமூடி,ஆவி பிடிக்கவும்.மஞ்சள் சிறந்த கிருமிநாசினி என்பது நாம்அனைவரும் அறிந்ததே. மஞ்சள் நமது சுவாசப்பாதையை சரிசெய்வதுடன், சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள மாசுக்கள்,மற்றும் பருக்களை உருவாக்கும் கிருமிகள் விரைவில் வெளியேற உதவுகிறது.(பருவிலிருந்து ரத்தம் வெளிவந்தால் பயம் வேண்டாம்..மிகமென்மையான cloth tissue கொண்டு மிகமென்மையாக ஒற்றி எடுங்கள்.)
முகப்பரு, மற்றும் acne உள்ளவர்கள் கண்டிப்பாக இதை பயமின்றி செய்து பலன்பெறலாம்.

மஞ்சள் கலந்து steaming நமக்கு பயன்தருவதைப்போலகையளவு துளசியைப் போட்டும் ஆவி பிடிக்கலாம்.
எலுமிச்சை இலை அல்லது அரை மூடி எலுமிச்சை சாறு கலந்தும் ஆவி பிடிக்கலாம்.வேப்பிலை கையளவு போட்டும் ஆவி பிடிக்கலாம்.உங்களுக்கு வசதிப்படும் வகையில் ஏதாவது ஒன்றைசெய்து பலன்பெறலாம்.


கடைசியில் ஐஸ் கட்டியை towel -ல் சுற்றி முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஒற்றி , சருமத் துவாரங்கள் விரிவடையாமல் இருக்க ஒத்தடம் வைக்கலாம். அல்லது குளிர்ந்த நீரினால் முகத்தை அலசலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website