முகத்தில் இருக்கும் சுருக்கம் மறைய கொய்யாப்பழம் போதும்!

September 15, 2023 at 7:57 pm
pc

பொதுவாகவே பெண்களுக்கு தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாகவே இருக்கும். ஆனால் அதற்கு எதிராக அவர்களுக்கு பல அசௌகரியங்கள் ஏற்படும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் வயதாகியவுடன் ஒருவருடைய முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும். அதை எப்படி தவிரப்பது என்று தெரியாது. ஆகவே ஒரு கொய்யா பழத்தை வைத்து எப்படி முகத்தில் உள்ள சுருக்கத்தை போக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

கொய்யா சுவையாக இருப்பதைத் தவிர ஆரோக்கியமான பல ஊட்டச்சத்துக்களையும் தருகின்றது. கொய்யாவில் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளது. இது இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவுகிறது. இது தவிர ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

சுருக்கத்தை எப்படி தடுக்கும்?

கொய்யா வைட்டமின் சி மற்றும் லைகோபீன் இருப்பதால் இது இளமையான சருமத்தைப் பெற உதவுகிறது. இது சருமத்தின் நீர் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.  

கொய்யாப்பழத்தில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி மற்றும் கரோட்டின், லைகோபீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது சருமத்தில் ஏற்படும் சேதத்தை தடுக்கும். ஆகவே தினமும் ஒரு கொய்யப்பழம் சாப்பிட்டு வருவது நல்லது.

மேலும் இது தவிர என்ன செய்யலாம் என விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • ரோஸ் வாட்டர் – 5

  • தேன் – 1 ஸ்பூன் அளவு

  • கஸ்தூரி மஞ்சள் – 1 ஸ்பூன் அளவு 

  • பூ வாழைப்பழம் – 1

  • எலுமிச்சை சாறு – 1/2 பழம்

  • ஒலிவ் எண்ணெய் – 1 ஸ்பூன் அளவு 

செய்முறை

  • ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரை எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் ஒரு சிட்டிகை கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கலக்குங்கள். இந்த கலவையை முகத்தில் காய்ந்ததும் முகத்தை கழுவுங்கள்.

  • பிறகு, ஒரு பூ வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை மசித்து முகத்தில் போடுங்கள். அரை மணி நேரம் கழித்து தேய்த்து கழுவவும்.

  • எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெயை எடுத்து அதில் சில துளி எலுமிச்சை சாறு கலக்கவும். இந்த கலவையை முகத்தில் போட்டு அரை மணி நேரம் பிறகு முகத்தை கழுவவும்.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website