முகத்தை மூடிக்கொண்டு பெண் உடன் தலைதெறிக்க ஓடிய விஷால்!

December 27, 2023 at 11:18 am
pc

கோலிவுட் திரையுலகில் பிரபல கதாநாயகர்களுள் ஒருவராக வலம் வருபவர், விஷால். இவர் வெளிநாட்டில் இளம் பெண்ணுடன் முகத்தை மூடி ஓடும் வீடியோ தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. தெலுங்கு தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் மகன் விஷால், 2004ஆம் ஆண்டு வெளியான ‘செல்லமே’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நட்சத்திரமாக திகழும் இவர், பல ஆக்‌ஷன் படங்களில் நடித்துள்ளார். காதல் படமாக இருந்தாலும் அதில் வெட்டுக்குத்து-சண்டை காட்சிகளில் நடிப்பதுதான் இவருக்கு பிடித்த விஷயமாக இருக்கும்.

நடிகர் விஷாலுக்கு தற்போது 46 வயதாகும் நிலையில் தற்போது வரை சிங்கிளாக இருக்கும் இவரை சுற்றி எப்போதும் காதல் சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. இவர், லக்‌ஷ்மி மேனனுடன் பாண்டிய நாடு மற்றும் நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தார்.

அதன் பின்னர் இருவருக்கும் காதல் என சர்சைகள் கிளம்பியது.இவர்கள் அதன் பிறகு பெரிதாக எந்த படத்திலும் சேர்ந்து நடிக்கவில்லை. இதையடுத்து அந்த சர்ச்சைகளுக்கு முழுக்கு போடப்பட்டது.

நடிகர் விஷாலுக்கும் தெலுங்கு நடிகை அனிஷாவிற்கும் 2019ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. ஆனால், சில பிரச்சனைகள் காரணமாக இந்த திருமணம் தடைப்பட்டு போனது. இதற்கான காரணம் குறித்து வெளியில் பேசப்படவில்லை. 

இந்நிலையில், நடிகர் விஷால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்காக அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அங்கு நியூயார் நகரத்தில் இளம்பெண் ஒருவருடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது ஒருவர் தங்களை வீடியோ எடுப்பதை பார்த்து பதறிப்போன விஷால் முகத்தை மறைத்துக்கொண்டு அந்த பெண் உடன் தலைதெறிக்க ஓடிய வீடியோ வெளியாகி இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது.https://www.youtube.com/watch?v=dm-HQwXmdDY&t=2s

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website