முகேஷ் அம்பானி, ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர்-15-வது இடத்திற்கு இறங்கிய கவுதம் அதானி…

February 2, 2023 at 11:13 pm
pc

உலக பணக்காரர்கள் பட்டியலில் 15-வது இடத்திற்கு இறங்கிய கவுதம் அதானி ஆசியாவின் நம்பர்-1 பணக்காரர் அந்தஸ்தையும் இழந்துள்ளார்.

அமெரிக்காவின் short-seller அறிக்கையின் எதிரொலியாக அதானி குழுமம் மீண்டும் சரிந்ததால், கவுதம் அதானி ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை புதன்கிழமை இழந்தார்.

உலக பணக்காரர்கள் வரிசையில் 3-வது இடத்தில் இருந்த கவுதம் அதானி, அமெரிக்காவின் Hindenburg அறிக்கையை தொடர்ந்து, படிப்படியாக குறைந்து உலக பணக்காரர்கள் வரிசையில் 11-வது இடத்திற்கு சென்றார்.

இந்நிலையில், அதானியின் சொத்து மதிப்பு மேலும் குறைந்து 15-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

உலக பணக்காரர்கள் வரிசையில் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ள முகேஷ் அம்பானி, ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தை பெற்றுள்ளார். 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website