முக கருமையை தடுக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாமா …?

October 8, 2022 at 4:16 pm
pc

வெயில் காலம் வந்தாலே பெண்கள் அதுவும் வேலைக்கு போகும் பெண்கள் பயப்படுவது சூரியனுக்கு தான். முகம் கருமையாகுமே என சன் ஸ்க்ரீன் லோஷன் போட்டு, முகம் முழுக்க துப்பட்டாவினால் மறைத்துக் கொண்டு செல்வார்கள். அவர்களுக்கு தேங்காய் எண்ணெய் ஒரு வரப்பிரசாதமாகும்.

மார்கெட்டுகளில் கிடைக்கும் ஸன் ஸ்க்ரீன் லோஷன் புற ஊதா கதிர்களிடமிருந்து நம் சருமத்தை காப்பாற்றும்தான். ஆனால் அவற்றில் கலந்துள்ள கெமிக்கல்கள் நம் சருமத்திலேயே தங்கி விடும். தேங்காய் எண்ணெய் புற ஊதாகதிர்களை நம் சருமத்தில் அண்ட விடாத அருமையான கவசமாகும்

தேங்காய் எண்ணெய் போதிய அளவு எடுத்து முகம் ,கைகள் என வெயில் படும் இடங்களில் தடவ வேண்டும்.

அது விரைவில் சருமத்தினால் உறிஞ்சுக்கொள்ளும். வெயிலின் தீவிரத்தில் சருமத்தின் மேல் ஒரு திரை போன்று செயல் படுகிறது.

அல்லது மிகவும் தரம் வாய்ந்த சன் ஸ்க்ரீன் லோஷனுடன் தேங்காய் எண்ணெய் கலந்தும் உபயோகிக்கலாம்.

வெளியில் போவதற்கு சில நிமிடங்கள் முன்பாக போட்டால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

இன்னொரு நல்ல விஷயம் தேங்காய் எண்ணெய், விட்டமின் D-யை, உடல் உறிஞ்சுக் கொள்ள உதவி புரிகிறது. ஆனால் மற்ற சன்-ஸ்க்ரீன் லோஷன்கள் வெயிலிருந்து சருமத்தை காத்தாலும், விட்டமின் D-யை உட்புக விடாமல் தடுக்கின்றன.

ஆகவே இயற்கையான ஸன் ஸ்க்ரீன் தான் எப்போதும் நமக்கு பாதகம் தராது என்பதை புரிந்து கொள்ளுங்கள்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website