முட்டை உற்பத்தியில் உலக அளவில் மூன்றாம் இடத்தை பிடித்த இந்தியா!

August 10, 2022 at 11:04 am
pc

உலக அளவில் முட்டை உற்பத்தியில் 3வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட தரவுகளின் படி, நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட முட்டைகளின் எண்ணிக்கை 2020-21 காலகட்டத்தில் 12 ஆயிரத்து 211 கோடியாக(122.11 பில்லியன்) அதிகரித்துள்ளது. 1950-51 காலகட்டத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த முட்டை உற்பத்தி, 183 கோடியாக(1.83 பில்லியன்) இருந்த நிலையில், இப்பொது பன்மடங்கு உற்பத்தி அதிகரித்துள்ளது.

1950களில் ஓர் ஆண்டுக்கு ஒரு தனிநபருக்கு கிடைக்கும் முட்டைகள் எண்ணிக்கை 5 முட்டைகளாக இருந்த நிலையில், 2020-21ல் ஆண்டுக்கு 91 முட்டைகளாக அதிகரித்துள்ளது. உலக அளவில் முட்டை உற்பத்தியில் முதலிடத்தில் சீனாவும்(38 சதவீதம்), அதனை தொடர்ந்து அமெரிக்காவும்(7 சதவீதம்) உள்ளன.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website