முதலமைச்சராக நடிக்க இருக்கும் ஜீவா ..வெளியானது பிரஸ்ட் லுக் போஸ்டர்

October 9, 2023 at 7:16 pm
pc

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’யாத்ரா’ என்ற படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

’யாத்ரா’ படத்தில் முன்னாள் ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி கேரக்டரில் மம்முட்டி நடித்தார். இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் ராஜசேகர் ரெட்டியின் மகனும் தற்போதைய ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறாக உருவாக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி கேரக்டரில் ஜீவா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். ’யாத்ரா’ முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website