முதல் 10 நிமிடத்தை மிஸ் பண்ணாதீங்க .. சர்ப்ரைஸ் கொடுக்கும் லோகேஷ் கனகராஜ் .

October 16, 2023 at 6:30 pm
pc

தளபதி விஜய் நடித்துள்ள ’லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் பத்து நிமிடத்தை யாரும் மிஸ் செய்து விட வேண்டாம் என லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

’லியோ’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னை உள்பட பல நகரங்களில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் விறுவிறுப்பாக டிக்கெட்டுகள் முன்பதிவு ஆகி வருகிறது

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ’லியோ’ திரைப்படத்தை காண வரும் ரசிகர்கள் முதல் பத்து நிமிடத்தை மிஸ் செய்து விட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அந்த காட்சிகளுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடுமையாக உழைத்து உள்ளோம் என்றும் எனவே முன்கூட்டியே திரையரங்குக்கு வந்து அமைதியாக உட்கார்ந்து முதல் 10 நிமிட வேற லெவல் அனுபவத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் அது ஒவ்வொரு ரசிகர்களுக்கும் ஒரு சிறப்பான விருந்தாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து உள்ளோம் என்றும் அதன் பலன் கண்டிப்பாக திரையில் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனவே வரும் 19ஆம் தேதி ’லியோ’ திரைப்படத்தை காண செல்லும் ரசிகர்கள் முதல் 10 நிமிடத்தை மிஸ் செய்து விடாத வகையில் முன்கூட்டியே செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website