முன்னாள் போப் ஆண்டவர் 16ஆம் பெனடிக்ட் மரணம் !!

January 1, 2023 at 7:32 am
pc

ஜேர்மனியைச் சேர்ந்த முன்னாள் போப் ஆண்டவர் 16ஆம் பெனடிக்ட் தனது 95வது வயதில் காலமானார்.

16ஆம் பெனடிக்

கடந்த 2005ஆம் ஆண்டு போப் ஆண்டவராக பதவி ஏற்றவர் ஜோசப் அலோசியஸ் ரட்சிங்கர். தனது இயற்பெயரை 16ஆம் பெனடிக்ட் என மாற்றிக்கொண்டார்.

2013ஆம் ஆண்டுவரை பதவியில் இருந்த பெனடிக்ட், வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் தனது பதவியை துறந்தார். போப் ஆண்டவர் பதவியை யாரும் தாமாக முன் வந்து துறந்ததில்லை.

னால், கடந்த 600 ஆண்டுகளில் முதல் முறையாக பதவியை துறந்த போப் ஆண்டவர் பெனடிக்ட் தான். 

95 வயதில் மறைவு 

இந்த நிலையில் முன்னாள் போப் ஆண்டவரான 16ஆம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக, தனது 95வது வயதில் காலமானதாக வாட்டிகன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website