முழுக்க முழுக்க நகைச்சுவையில் வெளிவந்த ரஜினியின் 5 படங்கள்!

June 19, 2023 at 9:45 am
pc

ரஜினி எத்தனையோ கேரக்டரில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். அதிலும் சில படங்களில் முழுக்க முழுக்க காமெடியனாக மாறி படம் பார்க்கும் நம்மளை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார். அப்படிப்பட்ட இவருடைய படங்களை பற்றி நாம் பார்க்கலாம்.

தில்லுமுல்லு: கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு தில்லுமுல்லு திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, தேங்காய் சீனிவாசன், நாகேஷ், பூர்ணம் விஸ்வநாதன், சௌகார் ஜானகி, மாதவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரஜினி, வேலைக்காக முதலாளிடம் பொய் சொல்லி அதை சமாளிப்பதற்காக செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் நகைச்சுவையாக அமைந்திருக்கும். அதற்காக இரண்டு சகோதரர்கள் என்று பொய் சொல்லி தில்லுமுல்லு செய்யும் கேரக்டரில் ரஜினி நடித்திருப்பார்.

அன்னை ஓர் ஆலயம்: ஆர் தியாகராஜன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு அன்னை ஒரு ஆலயம் திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, மோகன் பாபு, மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை ஆனது ஒரு குட்டி யானை அதனுடைய தாயை பிரிந்து தவித்து வரும் நிலையில் அதற்கு உதவி செய்யும் விதமாக கதை அமைந்திருக்கும். அதற்காக இவர் செய்யும் அனைத்து தந்திரமான விஷயங்களை பார்க்கும் பொழுது காமெடியாக அமைந்திருக்கும்.

ராஜாதி ராஜா: ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு ராஜாதி ராஜா திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, ராஜசேகர் மற்றும் சின்னராசு என்று இரண்டு கேரக்டரில் நடித்திருப்பார். இவருடன் நதியா, ராதா, ராதாரவி மற்றும் ஜனகராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் ராஜசேகர் என்பவர் சீரியஸான கேரக்டரிலும், சின்னராசு என்ற கேரக்டரில் இவர் வாழைப்பழத்தை இவருடைய காதலின் பிறந்தநாள் பரிசாக கொண்டு வரும் போது அதை ஆனந்தராஜ் ஆட்டையை போட்டு சாப்பிட்டு வெறும் தோலை மட்டும் இவரிடம் கொடுத்து விடும் காட்சியில் காமெடியில் கலக்கி இருப்பார்.

ராஜா சின்ன ரோஜா: எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு ராஜா சின்ன ரோஜா திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினிகாந்த், ரகுவரன், கௌதமி, எஸ்எஸ் சந்திரன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் தன்னுடைய முதலாளிக்கு கண் தெரியாது என்று நினைத்து கௌதமிடம் ஜொள்ளு விடும் காட்சியை பார்ப்பதற்கு நகைச்சுவையாக அமைந்திருக்கும். இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்று 175 நாட்கள் திரையரங்களில் ஓடியது.

வீரா: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வீரா திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினிகாந்த், மீனா, ரோஜா, ஜனகராஜ், செந்தில் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ரஜினி, இரண்டு பேரை திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக செய்யும் ஒவ்வொரு சூழ்ச்சியும் நம்மை சிரிக்க வைத்து ரசிக்கும் படியாக அமைந்திருக்கும். அதிலும் கோவிலில் மீனாவுடன் இருப்பதை ரோஜா பார்த்து விடக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக போகும்போது கட்டின வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் எஸ்கேப் ஆகுவார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website