மூல நோய்க்கு அரும்மருந்தாகும் வெற்றிலை!

February 26, 2024 at 11:22 am
pc

பொதுவாக மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மலம் கழிப்பதிலும் ஒரு இடத்தில் அமர்ந்து வேலை செய்வதற்கும் மிகவும் சிரமப்படுவார்கள். அவர்கள் மலம் கழிக்க சிரமப்படும் பொழுது சில சமயங்களில் இரத்தப்போக்கு ஏற்படவும் வாய்ப்பு காணப்படுகின்றது. இதற்கான சிகிச்சை சரியாக எடுக்கவில்லையென்றால் நிலைமை மோசமடைந்து அருவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

மருந்து வில்லைகளை விட நாம் வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு கை வைத்தியம் செய்து வந்தால் மூல நோய் விரைவில் நிரந்தரமாக குணமாகும். அந்த வகையில் மூல நோய்க்கு அரும்மருந்தாக வெற்றிலை பார்க்கப்படுகின்றது.

வெற்றிலையில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை இலகுவாக்கி மலம் கழிப்பதற்கு தேவையான ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுக்கின்றது.

வெற்றிலை பச்சையாக மென்று சாப்பிட வேண்டும். இதனால் மூல நோயின் தாக்கத்தால் ஆசன வாய்ப் பகுதியில் வலி, எரிச்சல் ஆகியவை ஏற்படுவதோடு வீக்கங்களையும் குறைக்கும்.

3 அல்லது 4 வெற்றிலைகளை சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து ஆசனவாயில் அப்ளை செய்யவும்.

இவ்வாறு செய்து வந்தால் மூலத்தால் ஏற்பட்ட வீக்கம் குறையும். ஒரு பாத்திரத்தில் வெற்றிலை 2 போட்டு கொதிக்க விட்டு காலை, மாலை என இரண்டு வேளைகளும் குடித்து வந்தால் மூல நோய் இடம் தெரியாமல் மறைந்து விடும்.

குடல் சுருக்கம், வயிறு வலி, சாப்பிட முடியாமல் சிரமப்படுதல் ஆகிய பிரச்சினைகளுக்கு வெற்றிலை சிறந்த தீர்வாக அமைகின்றது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website