மெஸ்ஸியின் “ஜேர்சிகள்” 10 மில்லியன் டொலருக்கு ஏலம்!

November 28, 2023 at 7:25 pm
pc

ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணித்தலைவரான லயனல் மெஸ்ஸி 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் அணிந்த ஜேர்சிகள் 10 மில்லியன் டொலருக்கு ஏலம் விடப்படவுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் போது அணிந்திருந்த ஆறு ஜேர்சிகள் ஏலம் விடப்படவுள்ளது.

அதில், பிரான்சுக்கு எதிரான பரபரப்பான இறுதிப் போட்டியின் போது அவர் அணிந்திருந்த ஜேர்சியும் அடங்கும். இந்த ஜேர்சிகள் 10 மில்லியன் டொலருக்கும் அதிகமாக ஏலம் போகலாம் என சோத்பிஸ் ஏல நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.36 வயதான லயனல் மெஸ்ஸி ஏலம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அறிவித்திருந்ததுடன் அதன் மூலம் கிடைக்கப்பெறும் ஒரு தொகை சாண்ட் ஜோன் டி டியூ பார்சிலோனா குழந்தைகள் மருத்துவமனையால் நடத்தப்படும் யுனிகாஸ் திட்டத்தின் மூலம் அரிய நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.ஏலம் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை சோத்பிஸ் ஏல நிறுவனத்தின் நியூயோர்க் கிளையில் நடைடைபெறும்.அதேவேளை 2022 ஆம் ஆண்டு டியாகோ மரடோனா 1986 இல் இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றபோது அவர் அந்தப் போட்டியில் அணிந்திருந்த ஜேர்சி 9.3 மில்லியன் டொலருக்கு ஏலம் போயுள்ளது.இது குறிப்பாக கால்பந்து விளையாட்டு நினைவுப் பொருட்களின் ஏல விற்பனையில் அதிக விலைக்கு ஏலம் போன விளையாட்டு பொருளாக சாதனை படைத்துள்ளது.இந்நிலையில் “உலகக்கிண்ண கால்பந்தாட்ட விளையாட்டு வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது, இது மெஸ்ஸியின் வீரம் நிறைந்த பயணத்துடன் உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டுள்ளதுமற்றும் சிறந்த வீரர் என்ற அந்தஸ்தை உறுதியாக நிலைநிறுத்துகிறது. இந்த ஆறு ஜேர்சிகளின் விற்பனை ஏல வரலாற்றில் ஒரு சிறந்த நிகழ்வாக இருக்கும். ரசிகர்கள் மற்றும் சேகரிப்பாளர்களுக்கு மெஸ்ஸியின் முடிசூட்டு சாதனைக்கான தொடர்பை வழங்குகிறோம்” என்று சோத்பிஸ் ஏல நிறுவனத்தின் நவீன சேகரிப்புகளின் தலைவர் பிராம் வாச்சர் தெரிவித்தார்.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website