மெஸ்ஸியை கட்டியணைத்து கதறிய மனைவி, தாய்- உணர்ச்சி மிகு தருணம்! வைரலாகும் வீடியோ

December 19, 2022 at 6:35 pm
pc

கத்தார் கால்பந்து உலக கோப்பையை அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தனது குடும்பத்துடன் இந்த வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

உலக கோப்பையுடன் மெஸ்ஸி

விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்று முடிந்துள்ள 2022ம் ஆண்டு கத்தார் கால்பந்து உலக கோப்பையில், அர்ஜென்டினா அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

ஐந்து முறை உலக கோப்பை கனவை தவறவிட்ட அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, இறுதியாக கத்தார் உலக கோப்பையில் தனது வாழ்நாள் கனவை நனவாக்கியுள்ளார்.

கத்தாரில் மன்னர்களுக்கு அணிவிக்கப்படும் தங்க உடையுடன் உலக கோப்பையை பெற்றுக் கொண்ட மெஸ்ஸி, தனது அணி வீரர்களுடன் இணைந்து இந்த வெற்றியை கொண்டாடினார்.

கட்டியணைத்து முத்தமிட்ட மனைவி

அர்ஜென்டினா கோப்பையை கைப்பற்றியதும் களத்திற்கு வந்த நட்சத்திர வீரர் மெஸ்ஸியின் மனைவி அன்டோனெலா ரோகுஸ்ஸோ, மெஸ்ஸியை கட்டியணைத்து முத்தமிட்டார், அத்துடன் கணவரின் வாழ்நாள் கனவு நனவானதை கண்டு மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் சிந்தினார்.

மேலும் கோப்பையை கையில் ஏந்திய மெஸ்ஸியின் மனைவி அன்டோனெலா ரோகுஸ்ஸோ, கோப்பைக்கு முத்தமிட்டு மகிழ்ந்தார்.

சந்தோஷத்தின் உச்சியில் இருந்த ஜாம்பவான் மெஸ்ஸி  உலக கோப்பையுடன் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சேர்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்

https://twitter.com/ESPNFC/status/1604570128166920196?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1604570128166920196%7Ctwgr%5E5db8436ad69d41c78d3878ab35c2af4dcdc050a9%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmanithan.com%2Farticle%2Ffifa-world-cup-win-messi-viral-video-1671438561

கட்டியணைத்த தாயார்

திடீரென மைதானத்திற்குள் நுழைந்த மெஸ்ஸியின் தாயார் சிலியா மரியா மெஸ்ஸி முதுகை தட்டி அவரை திருப்பினார்.

இதையடுத்து தாயாரை பார்த்து மெஸ்ஸி இன்ப அதிர்ச்சியடைந்த நிலையில் இருவரும் கட்டிபிடித்து கொண்டு மகிழ்ச்சியை ஆனந்த கண்ணீருடன் கொண்டாடினார்கள்.

https://twitter.com/goLoko77/status/1604591069722722306?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1604591069722722306%7Ctwgr%5E5db8436ad69d41c78d3878ab35c2af4dcdc050a9%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmanithan.com%2Farticle%2Ffifa-world-cup-win-messi-viral-video-1671438561
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website