மொறு மொறுனு மினி சமோசா தயார் செய்யலாம் வாங்க ..!!

May 27, 2022 at 2:31 pm
pc

தேவையானவை:
மைதா மாவு – ஒரு கப், பெரிய
வெங்காயம் – 4, பூண்டு – 10 பல்,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
பச்சை மிளகாய் – 2,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு
– தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும்.
மைதாவுடன் ஒரு டீஸ்பூன்
எண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்து பூரி மாவு பதத்துக்கு பிசையவும்.
வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு
காய்ந்ததும், சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பூண்டு,
இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து,
வெங்காயம் பொன்னிறமாகும்
வரை வதக்கி, நறுக்கிய
கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து மிகச் சிறிய அளவு உருண்டைகளாக உருட்டி, மிக மெல்லிய சப்பாத்திகளாகத்
தேய்க்கவும்.
பிறகு 4, 5 சப்பாத்திகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி, சூடான தோசைக்கல்லில் போட்டு
உடனடியாக திருப்பிவிட்டு
எடுக்கவும்.
பிறகு தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றையும் பாதியாக வெட்டவும். அதை முக்கோண
வடிவில் மடித்து உள்ளே
வெங்காய மசாலாவை வைத்து ஓரங்களை தண்ணீர் தொட்டு
ஒட்டவும்.
இதுதான் மினி சமோசா. கடாயில் எண்ணெயை
சூடாகி, மிதமாக காய்ந்ததும், மினி சமோசாக்களைப் போட்டு
பொரித்தெடுக்கவும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website