மோகன்லாலுக்கு ஜோடியாகும் 34 வயது நடிகை!
மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் மோகன்லால். இவர் சமீபத்தில் ஹேமா கமிட்டி சர்ச்சையில் சிக்கியதை நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். மோகன்லால் மற்றும் இயக்குனர் சத்யன் அந்திக்காடு கூட்டணியில் இதுவரை பல சூப்பர்ஹிட் படங்கள் வெளிவந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு இந்த கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் தான் என்னும் எப்பொழும்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மோகன்லால் மற்றும் சத்யன் அந்திக்காடு கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகவுள்ளது. இப்படத்திற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் மோகன்லால் ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் இப்படத்தில் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி தான் இப்படத்தில் மோகனலால் ஜோடியாக நடிக்கப்போகிறார் என இயக்குனர் சத்யன் அந்திக்காடு உறுதி செய்துள்ளார்.