“யசோதா” பான் இந்தியா திரைப்படம்-வேற லெவல் நம்ப சமந்தா….

August 31, 2022 at 1:54 pm
pc

நடிகை சமந்தா நடிப்பில் தற்போது “யசோதா” என்ற பான் இந்தியா திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகிறார்கள். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். “யசோதா” படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ளார். 

எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மார்த்தாண்டா கே வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.”யசோதா” படத்தின் டீசர் செப்டம்பர் 9-ஆம் தேதி மாலை 5:49 மணிக்கு வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website