ரஜினி இடத்தில் ராகவா லாரன்ஸ்..! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

August 26, 2022 at 2:40 pm
pc

லைக்கா தயாரிப்பில் உருவாகவுள்ள சந்திரமுகி இரண்டாம் பாகம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு

ரஜினி நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கத்தில் வெளியான இப்படத்தில் பிரபு, வடிவேலு, ஜோதிகா, நயன்தாரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

என்னதான் சந்திரமுகி மலையாள படத்தின் ரீமேக்காக இருந்தாலும் அதை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு பல மாற்றங்களை செய்து இயக்கியிருந்தார் வாசு. ரஜினி பாபா படத்தின் தோல்விக்கு பிறகு கட்டாய வெற்றியை எதிர்நோக்கியிருந்த சமயத்தில் வெளியான சந்திரமுகி திரைப்படம் மெகாஹிட்டானது.

மேலும் இப்படத்தில் ரஜினி மற்றும் வடிவேலுவின் காமெடி காட்சிகளும் பெரிதாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது 17 ஆண்டுகள் கழித்து சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது மிகப்பிரமாண்டமாக உருவாகவுள்ளது.

ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க பி.வாசு இப்படத்தை இயக்குகிறார். மேலும் லைக்கா இப்படத்தை தயாரிக்கிறது. சந்திரமுகி படத்தில் காமெடியினாக கலக்கிய வடிவேலு இப்படத்திலும் நடிக்கின்றார்.
இந்நிலையில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது தான் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website