ரஷ்ய-உக்ரைன் போர்- அப்பாவி பொதுமக்கள் 7000 பேர் கொல்லப்பட்ட அதிர்ச்சி!!

December 29, 2022 at 8:24 am
pc

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின்படி, உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரில் கிட்டத்தட்ட 7000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கீவ் இண்டிபென்டென்ட் தெரிவித்துள்ளது. 

பத்து மாதகால போர்

கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. கனரக பீரங்கிகள், பல ஏவுகணை ராக்கெட் அமைப்புகள், ஏவுகணைகள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் உக்ரனைத் தொடர்ந்து தாக்கி வருகிறது.

கிறிஸ்துமஸ் ஈவ் அன்று, கெர்சன் நகரின் மையப்பகுதி ரஷ்ய துருப்புக்களால் குறி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 6ஆம் திகதி, ரஷ்யாவின் படையெடுப்பால் பரவலான மரணம், அழிவு, இடப்பெயர்வு மற்றும் துன்பங்கள் நடந்துள்ளன என ஐ.நா அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவித்தார்.

கொல்லப்பட்ட மக்கள்

இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்களுக்கு ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பின்படி, பிப்ரவரி 24ஆம் திகதி முதல் டிசம்பர் 26ஆம் திகதி வரை உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் குறைந்தது 6,884 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என கீவ் இண்டிபென்டென்ட் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில் கடந்த 27ஆம் திகதி Seredino-Budsk community, The Shalyginsk community மற்றும் The Esmansk community ஆகிய மூன்று முன்னணிப் பகுதிகளை மீது ரஷ்ய துருப்புகள் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அரசியல் பிரமுகர் மற்றும் Sumy Oblast ஆளுநர் Dmytro Zhyvytskyi தெரிவித்தார்.   

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website